பொறியியல் கலந்தாய்வு 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது. விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆக.25 தொடங்கி, அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற ஆகஸ்ட் 20 தொடங்கி 23 வரை நடைபெறும். தமிழக பொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் இம்மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node