நடிகர்கள் விளம்பரத்தில் வருகிறார்கள் என்பதற்காக ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம் என டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். ஆன்லைன் விளையாட்டு மோகம் தற்காலத்து இளைஞர்கள் மத்தியில் கொஞ்சம் அதிகமாகவே பரவி வருகிறது. குறைவான முதலீடு அதிகளவு லாபம் என கண்ணை பறிக்கும் விளம்பரங்கள் படித்த இளைஞர்களையும் கவர்ந்து விடுகின்றன. அதனை நம்பி ஏமாந்து பலர் தங்கள் பெரும்பகுதி பணத்தை இழந்துள்ளனர். சிலர் இதனால் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரையும் மாய்ந்துள்ள சம்பவங்களையும் நாம் அவ்வப்போது செய்திகள் மூலம் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்நிலையில்,சென்னையில் 7-வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை சுற்றி மெழுகுப்பூச்சுடன் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இன்று மாலை 5:30 மணிக்கு சிலை திறப்பு விழா நடந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை திறந்து வைத்தார். […]
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி,இன்று தமிழகம்,புதுவை,காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்,கேரளா,லட்சத்தீவு […]
தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் CEO பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக,பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT),கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு, பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி வாய்ப்புகளை வழங்கி, கல்வி தொலைக்காட்சியை நடத்தி வருகிறது. கொரோனா தொற்றுநோய்களின் போது இலட்சக்கணக்கான குழந்தைகளை லீமிங்கில் ஆதரிப்பதற்காக ஒற்றை புள்ளி ஊடகமாக […]
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி அவர்கள்,கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில்,அவர் தனது பதவியை நிறைவு செய்ததையடுத்து பாராட்டு விழா நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில்,பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 11.00 மணி முதல் திருவேற்காட்டில் நடைபெற்று வரும் நிலையில்,பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அவர்களை ஒரு மனதாக தேர்வு செய்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பாமகவில் இளைஞரணி தலைவராக இருந்து வந்த […]
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை (Service Pension) குடும்ப ஓய்வூதியமாக (Family Pension) மாற்றம் செய்வதில் அதிக காலதாமதமும் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்,குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் கணவன் மற்றும் மனைவி இறப்பு சான்றிதழ் மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என்று தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”இனிவரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு,ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் (IFHRMS) கணவன் […]
சமூகநீதியும் மதநல்லிணக்கமும் செழித்துச் சிறந்திருப்பதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள இயலாமல்,மதவாத நச்சு விதைகளைத் தூவிட முயற்சி அபாயகர சக்திகள்,அவர்களுக்குத் துணை போகும் அடிமைகளிடமிருந்து தமிழகத்தை சேதாரமின்றி பாதுகாக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும்,அபாயகரமான சக்திகளை அடையாளம் காட்டிடும் வகையில் தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பட்டறைகளை நடத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,திமுக […]
வரிசெலுத்துவோரிடம் கடுமையாக நடந்து கொள்ளும், தொல்லை செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவையில் கடந்த 19-ஆம் தேதி முதலீட்டார்கள் மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு முதல் முறையாக நடைபெற்றது குறித்தும் சொன்னீர்கள். இதுபோன்ற ஆலோசனைக் கூட்டமும் முதல் முறையாக இந்தக் கோவையில் தான் நாம் தொடங்கியிருக்கிறோம். ஏதோ பேசியிட்டு, […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்தக் கூட்டத்தில் திமுக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில், ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், திமுக உட்கட்சித் தேர்தல், அடுத்த மாதம் கூடவுள்ள பொதுக்குழு பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
அமமுக நிர்வாகி சுப்பிரமணியன் மர்ம கும்பலால் வெட்டி கொலை. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு வயது 40. பாளையங்கோட்டையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் இவர், கருங்குளம் ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல பணியை முடித்துவிட்டு கடையில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது மர்ம கும்பல், வீட்டுக்குள் நடந்து சென்ற அவரை சரமாரியாக வெட்டிவிட்டு […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது எனவும் மற்றும் தலைநகரம் கொலை நகராமாகி வருகிறது எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக தலைமை குற்றம் சாட்டியிருந்தது.இந்நிலையில், தமிழகத்தில் எந்த சூழலிலும் குற்றச் செயல்கள் நடைபெறாத ஒரு காலத்தை உருவாக்க வேண்டும் எனவும்,கூலிப்படை முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் குடியரசுத் தலைவர் பதக்கங்கள்,தமிழக முதல்வர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று […]
கோவை ஆனந்தாஸ் உணவாக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை. கோவை ஆனந்தாஸ் உணவாக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வடவள்ளி, காந்திபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொள்கிறது. மேலும் அனந்தாஸ் உணவக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த ஆண்டு பல இடங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை. இந்த அக்கினி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல இடங்களில் மழை பெய்த காரணத்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் நலம் பராமரிப்பதற்காக,சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை ரூ.30-லிருந்து ரூ.50-ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக,தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022-2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார்: அதன்படி,”22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம்,உடல் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு குறைத்து. இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில்,சென்னையில் 6-வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு […]
தமிழகத்தில் குரூப் 2 குரூப் 2ஏ-இல் 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.இதனையடுது,கடந்த மே 21 ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வு 4,012 தேர்வு மையங்களில் நடைபெற்ற நிலையில், இத்தேர்வுகளை சுமார் 84.44% பேர் மட்டுமே எழுதினர் என TNPSC தெரிவித்திருந்தது. குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் ( […]
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில்,அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் இலவச பயணம் என்பதும் ஒன்று.அதன்படி,நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இதனையடுத்து,பெண்களை தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே,கடந்த மே 5 ஆம் தேதி,தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர்:” 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைத்து வகை […]
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை,துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார்.இந்த நிகழ்வு இன்று (28-ஆம் தேதி) மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியை காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் நேற்று இரவு 3 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பதறிப்போன அக்கம் பக்கத்தினர், அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். விவரம் அறிந்து, அங்கு புதுசேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். இந்த திடீர் வாந்தி மயக்கம் பற்றி அவர்கள் விசாரித்துள்ளனர். இதற்கிடையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களுக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ குழு ஆய்வு […]