கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். 33-வயதான இவர் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் மனைவி காயத்திரி தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு விமலா என்ற பெண்குழந்தை உள்ளது. இந்த குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த தம்பதிகள் “வில்மா சாதி, மதம் சாராதவர்” என்ற சான்றிதழை வருவாய்த்துறையில் வாங்கியுள்ளனர். தனது மகளை பள்ளியில் சேர்க்க சென்றபோது சாதி சான்றிதழில் அவர்கள் எந்த […]
தமிழகத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழத்தின் உள்மாவட்டங்களின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது எனவும்,இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோவை, திருப்பூர்,திண்டுக்கல்,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும்,நாளை முதல் நான்கு நாட்கள் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் […]
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப் படிப்புகள் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவிப்பு விடுத்துள்ளது. மேலும்,பெரியார் பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் யாரும் சேர வேண்டாம் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம்,முன் அனுமதி பெறாமல் தொலைதூரக் கல்வி,ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து பெரியார் பல்கலைக்கழகத்திடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர், உயர்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு யுஜிசி பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் என சுமார் 25,000 பேர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.முந்தைய அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 60-ஆக மாற்றப்பட்ட நிலையில்,தற்போது முதல்முறையாக 25,000 பேர் இன்றுடன் தங்கள் பணியை நிறைவு செய்கின்றனர். புதிய நடைமுறையின்படி,கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர்.ஏற்கனவே,மாநில அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது […]
வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிதியில் கற்றுத்தரப்படும் பேசன் டெக்னாலஜி,டெய்லரிங் டிசைனிங் உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எனினும்,நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முடித்து 10 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும் எனவும்,வரும் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 5 பாடங்கள் மட்டுமே இருக்கும் எனவும் […]
கடந்த மே 5 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வந்த நிலையில்,மே 28 ஆம் தேதி வரை நடைபெற்ற வேதியியல் பாடத்திற்கான இரு வினா எண்கள் தவறாக இருந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில்,12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் வேதியியல் வினாத்தாளில் இடம்பெற்ற இரு கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி,பகுதி 1-அ,வினா எண் 9 அல்லது பகுதி 1-ஆ,வினா எண் 5-க்கு விடையளித்திருந்தால் முழு […]
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O-ன் கீழ் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தெரிவித்திருந்தது.இதுபோன்று,6,319 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 449 டன் குட்கா மற்றும் 113 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும்,கஞ்சா பதுக்கல்,விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர்களின் வங்கி கணக்கு,சொத்துக்களை முடக்க காவல்துறை உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்துவோர், பதுக்குவோர், […]
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் புதல்வரும்,திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைப்போல,திண்டுக்கல் கலைஞர் அரங்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திலும் அதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும்,தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்திலும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,தனக்கு […]
நாடு முழுவதும் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு விடுத்தார்.மேலும்,மத்திய அரசைப் பின்பற்றி,அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது,உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில்,தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம், டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால்,சென்னையில் […]
தமிழகத்தில் உள்ள பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.17 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “அண்மையில் நடைபெற்ற 2022-2023-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) அவர்களால் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி,திருவண்ணாமலை,திருப்பத்தூர்,கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி,திண்டுக்கல்,ஈரோடு,நாமக்கல்,கோயம்புத்தூர்,நீலகிரி, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்,சாலை வசதி,குடிநீர் வசதி,தடுப்பணை கட்டுதல் […]
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு,எம்எல்ஏக்கள் விகிதாச்சார அடிப்படையில் திமுகவிற்கு நான்கு இடங்களும்,அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கிடைக்கப்பெறும் நிலையில்,மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,ஈரோடு,சேலம்,நாமக்கல்,கரூர், திருச்சி,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே சமயம்,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில்,சென்னையில் 9-வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர்,புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலுர், அரியலூர்,கடலூர்,தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டணம், மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே,எம்எல்ஏக்கள் விகிதாச்சார அடிப்படையில் திமுகவிற்கு நான்கு இடங்களும்,அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கிடைக்கப்பெறும் நிலையில்,திமுக கூட்டணிக்கான நான்கு இடங்களில்,திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம்,கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவர் என்றும்,ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு […]
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை முன்னிட்டு கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில்,நாளை (மே 31-ஆம் தேதி) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில்,சென்னையில் 8-வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில்,சென்னையில் 8-வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாஜக ஆதரவாளரும்,யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழக அரசின் அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள ஒரு கோயிலை புணரமைப்பதாக கூறி ரூ.50 லட்சம் அளவில் பொதுமக்களிடம் நிதி வசூலித்த புகாரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து,கார்த்திக் கோபிநாத் அளிக்கும் பதில்கள் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக […]
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே,தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29-ல் முடிவடைய உள்ள நிலையில்,தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,ஆர்எஸ் பாரதி,டிகேஎஸ் இளங்கோவன்,ராஜேஸ்குமார்,நவநீதகிருஷ்ணன்,எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் பதவிக்காலம் ஜூன் இறுதியில் முடிவடைகிறது. […]