#Breaking:தமிழகத்தில் தொடங்கியது பருவமழை;இன்று 10 மாவட்டங்களில் கனமழை- வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழத்தின் உள்மாவட்டங்களின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது எனவும்,இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழத்தின் உள்மாவட்டங்களின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது எனவும்,இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோவை, திருப்பூர்,திண்டுக்கல்,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும்,நாளை முதல் நான்கு நாட்கள் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மேலும்,தென் கிழக்கு அரபிக்கடல்,இலட்சத்தீவு,கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல்,தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.மாலத்தீவு பகுதிகளில் பலத்தக்காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

unknown node