உடலுக்கு கேடு விளைவிக்கும் குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் மே 23 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில்,தற்போது குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்கள் தயாரித்தல்,விநியோகித்தல் ஆகியவற்றுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,தமிழகத்தில் குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே தடை விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே,தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29-ல் முடிவடைய உள்ள நிலையில்,தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன்,ராஜேஸ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் […]
வருகின்ற ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதனையடுத்து,ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும்,சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில்,சென்னையில் 5 வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை […]
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார்.அவருக்கு விமான நிலையத்தில்,அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என்.நேரு. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.அதனை தொடர்ந்து,விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ்.அடையாறு தளம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார். இதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு வந்தடைந்தார்.இந்த நிகழ்ச்சி மேடையில்,பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்தனர்.இதனையடுத்து,ரூ.31,500 கோடி மதிப்புள்ள […]
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,நீலகிரி,கோவை,திருப்பூர்,திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி,நாமக்கல், கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை,வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் […]
கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் ஜூன்-13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு பொது தேர்வு எப்போது நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு : 1 – 10 ம் வகுப்பு – ஜூன் 13-ல் பள்ளிகள் திறப்பு; 11-ம் வகுப்பு – ஜூன் 27-ல் பள்ளிகள் திறப்பு 12-ம் வகுப்பு […]
பாஜக பிரமுகர் பாலசந்தர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதுகாவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று இரவு அவரது பாதுகாப்பு காவலர் பிஎஸ்ஓ பாலகிருஷ்ணன் சித்தாதரிபேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்று அங்கு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது காவலர் பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த 6 […]
இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசும் கூட்டத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வன் அவர்கள், இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திப் பேசும் கூட்டத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமயச் சுதந்திர உரிமை, அதாவது Right to Freedom of Religion அளிக்கப்பட்டு இருக்கிறது. சமயச் […]
எனது தலைமயில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை இருக்கிறது என வி.கே.சசிகலா பேட்டி. சென்னையில் வி.கே.சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எனது தலைமையில் அதிமுக செயல்படும் என 100% எனக்கு நம்பிக்கை இருக்கிறது; அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது; அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை; ஒரு சிலர்தான் பேசுகிறார்கள். எனது தலைமயில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை இருக்கிறது; அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில் தான் […]
காவலரின் பாதுகாப்பை மீறி பாஜக பிரமுகர் பாலசந்தர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று இரவு அவரது பாதுகாப்பு காவலர் பிஎஸ்ஓ பாலகிருஷ்ணன் சித்தாதரிபேட்டை சாமி நாயக்கர் தெருவுக்கு சென்று அங்கு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது காவலர் பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் […]
சென்னையில் இன்று (மே 25-ஆம் தேதி) இளைஞர் திறன் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.அதிக வேலைவாய்ப்பு உள்ள தொழில்களை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படுகிறது. மேலும்,திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பெற உதவும் வகையிலும் திருவிழா நடத்தப்படுகிறது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.இத்திருவிழாவானது மாநிலத்தின் 388 வட்டாரங்களிலும் ஊரக வளர்ச்சி மற்றும் தொழிலாளர்கள் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை ராணி […]
வீரப்பன் அண்ணன் மாதையன் உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் கர்நாடகாவில் வழக்கு ஒன்றில் மாதையன்,கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கர்நாடக சிறையில் தண்டனையை அனுபவித்த நிலையில்,அந்த வழக்கு நிறைவடைவதற்கு முதல் நாள்,தமிழக வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் அவர் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கில் 35 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை பெற்று வந்த பாதையன் வர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்,நெஞ்சுவலி ஏற்பட்டதால் கடந்த மே […]
திமுக பத்தாண்டு காலத்தில் செய்ய வேண்டிய சாதனையை ஒரே ஆண்டில் செய்துள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சேலம் ஆத்தூரில் திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் உரையாற்றி உள்ளார். அவர், கடந்த ஆண்டு மே மாதம், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று உதயசூரியன் உதயமானது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்றவுடன் எனக்குள் சற்று தயக்கம் இருந்தது. அதற்கு காரணம் என்னவென்றால், 10 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தின் நிதி நிலைமை […]
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகத்திலிருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டு ரேஷன் அரிசி ஆந்திரா வழியாக கர்நாடகாவிற்கு பெருமளவு கடத்தப்படுகிறது என்ற ஆந்திர […]
தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனத்தால் தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, 26 ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான வழக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில […]
2022-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள ‘கல்பனா சாவ்லா’ விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர். […]
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன். கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கேரள முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த […]
கோயில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு. கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் காவல்துறை உடனே நிகழ்ச்சியை தடுத்தி நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் […]
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது. சென்னையில் மக்கள் கவனக்குறைவாக உள்ளனர். மக்கள் அலட்சியமாக செயல்படாமல் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள கவனமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், குரங்கு அம்மை என்பது பெரியம்மையுடன் சேர்ந்தது என உலக […]