2022-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள ‘கல்பனா சாவ்லா’ விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர். […]
கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன். கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் கேரள முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த […]
கோயில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு. கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் காவல்துறை உடனே நிகழ்ச்சியை தடுத்தி நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் […]
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் சில இடங்களில் கொரோனா கிளஸ்டர் உருவாகிறது. சென்னையில் மக்கள் கவனக்குறைவாக உள்ளனர். மக்கள் அலட்சியமாக செயல்படாமல் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள கவனமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், குரங்கு அம்மை என்பது பெரியம்மையுடன் சேர்ந்தது என உலக […]
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி. சென்னை அடுத்து ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, தமிழ்நாட்டில் கஞ்சா வழக்கில் இதுவரை 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 200 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டையில் கைதானவர் மீண்டும் குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என சட்டம் ஒழுங்கு சரியில்லை […]
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14 ஆம் தேதியிலிருந்து கோடை விடுமுறை வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து,கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம்? என்று கூறப்பட்டது. இந்நிலையில்,தமிழகத்தில் கோடைக்கால விடுமுறைக்கு பிறகு 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளார். மேலும்,வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் எந்தெந்த தேதிகளில் நடைபெறவுள்ளன […]
பத்திரிக்கையாளர்கள்,பெண்கள் மீதெல்லாம் கிரிமினல் வழக்கு பதிவு செய்வதென்பது அப்பட்டமான அத்துமீறலாகும் என டிடிவி தினகரன் ட்வீட். ஜி ஸ்கொயர் பத்திரிகை நிறுவனத்தின் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் அவசர, அவசரமாக குற்ற வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜி ஸ்கொயர் (G Square) பிரச்னையில் பத்திரிகை நிறுவனத்தின் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் அவசர, அவசரமாக குற்ற வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. தி.மு.க.வின் அதிகார […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில்,இன்று கொரோனா தொற்று இரண்டாயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் தற்போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் 6 மாணவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுளனர் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக,சென்னை ஐஐடியில் இதே போல் […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேரள முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கேரள முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எனது அன்புத் தோழரும், மாண்புமிகு கேரள முதலமைச்சருமான திரு. பினராயி விஜயன்அவர்களுக்கு இனிய பிறந்தநாள் […]
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கான நீரை மலர் தூவி திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கான நீரை மலர் தூவி திறந்து வைத்தார். நாடு விடுதலைக்குப் பின் கோடை காலத்தில் முதல் முறையாக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் மேட்டூர் அணை நான்கு முறை திறந்திருந்தாலும் தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. ஜூன்-12-ஆம் தேதிக்கு முன் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள […]
தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது என ஈபிஎஸ் ட்வீட். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன, இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது. காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் கருத்துக்களை முடக்குவதிலே […]
குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம். உலக நாடுகளில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபக்கம் மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பரவியுள்ளதாக உலக […]
மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம். தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான 1,000 இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ளது. இன்று முதல் 6 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று மருத்துவக் […]
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.இந்த சூழலில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.38,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு […]
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே,சேர்க்காடு பகுதியில்,அனில்குமார் என்பவரின் அடகு கடையின் சுவரில் துளையிட்டு ரூ.75 லட்சம் மதிப்புள்ள 750 கிராம் தங்க நகைகள்,30 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைக்கடையில் நேரடியாக துளையிட கொள்ளையர்கள் முயற்சித்த நிலையில் அதன் பக்கவாட்டு சுவர்கள் மிகவும் உறுதியாக இருந்ததால்,அருகில் இருந்த மற்றொரு நபருக்கு சொந்தமான கடையினுள் சென்று துளையிட்டு,அதன்பின்னர் அக்கடையின் உள்ளே புகுந்து அடகு கடையின் பக்கவாட்டில் துளையிட்டு ரூ.75 லட்சம் மதிப்புள்ள […]
திமுக விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகளின் சார்பில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் ஒரு பவுன் தங்க மோதிரத்தை வழங்கினார். திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகளின் சார்பில் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் ஒரு பவுன் தங்க […]
வெப்பச்சலனம் காரணமாக,தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக,வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:”தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் அறிவிப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து,மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டது.இந்நிலையில்,சென்னையில் இரண்டாவது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் […]
உயர்தர மதுபான விடுதிகளுக்கான வணிக வரித்துறையினரால் விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்யக்கோரி வழக்கு. உயர்தர மதுபான விடுதிகளுக்கு வணிக வரித்துறை விதிக்கும் வரியை ரத்து செய்யக்கோரி சிவகாசியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, உயர்தர மதுபான விடுதிகளில் வரி வசூலிக்க வணிக வரித்துறைக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு. விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனுக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல் நீட்டிப்பு செய்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். தனியார் மின் நிலையத்தில் பணியாற்ற 250க்கும் அதிகமான சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டதாக பாஸ்கர […]