கோயில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் இருக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு.
கோயில் திருவிழாக்களில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் காவல்துறை உடனே நிகழ்ச்சியை தடுத்தி நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தாக்கல் செய்த மனுக்கள் செய்திருந்தனர். மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை நீதிபதி தமிழ்செல்வி பல நிபந்தனைகளை விதித்து ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.