விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல். விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 680 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டுள்ளது. ஹரிஹரன் உள்பட 4 பேர் தொடர்பான 440 பக்க குற்றப்பத்திரிகை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேர் தொடர்பாக 240 பக்க குற்றப்பத்திரிகை விருதுநகர் இளம்சிறார் குழுமத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் […]
அரியலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. அரியலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். கணவன், மனைவி, மாமியார், பேத்தி என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விபத்தில் ஒரு பெண் மட்டும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் […]
பேரறிவாளன் மற்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பேரறிவாளன் தாயார் […]
திமுக ஒரு மனிதாபிமான அடிப்படையிலே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது என அமைச்சர் ரகுபதி பேச்சு. புதுக்கோட்டையில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பேரறிவாளன் தியாகி என நாங்கள் கூறவில்லை. திமுக ஒரு மனிதாபிமான அடிப்படையிலே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது. அவரின் தாயாரின் போராட்டத்தின் பலனாக மனிதாபிமான அடிப்படையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனை […]
தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களை கண்டறிய தானியங்கி மழைமானிகள் அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு. மாநிலத்தின் நீர்வள ஆதாரங்களை கண்டறிய தமிழகத்தில் 1,000 தானியங்கி மழைமானிகள் அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் 1,000 தானியங்கி மழைமானிகள் அமைக்கப்படவுள்ளன என்று நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழகத்தில் 34 ஆறுகள், 17 ஆற்று வடிநிலங்கள், 127 உப […]
வருகிற 28 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம். மே 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்து. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் […]
தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,வருகின்ற கல்வியாண்டுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்பதனால் அவை வரும் கல்வியாண்டு முதல் மூடப்படவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தினால்,வருகின்ற கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நாங்கள் நடத்தவில்லை என்று கூறி தமிழகத்தில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் கடிதம் அனுப்பியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 494 தனியார் கல்லூரிகள் […]
கடந்த ஓராண்டில் 4.1% – மாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, 3.8-ஆக குறைத்து சாதனை படைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் புத்தா நத்தம் ஊராட்சி, கலைஞர் திடலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய கழகச் செயலாளர் C.இராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் உரையாற்றிய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், கடந்த ஓராண்டில் 4.1% – […]
இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்கும் நோக்கில் சென்னையில் இன்று (மே 23 ஆம் தேதி) முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.மேலும்,இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி,சென்னையில் இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் […]
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா? என அனைத்து மாநிலங்களும் விமர்சனம் செய்து வருகிறது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக தேர்தல் அறிக்கையில் 72 மணி […]
விலைவாசி உயர்வை மறைக்க மத்திய அரசு நாடகம் அரங்கேற்றுவதாகவே எண்ணத் தோன்றும் என மக்கள் நீதி மய்யம் ட்வீட். பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாகவும், இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்றும், அனைத்து மாநில அரசுகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இருப்பினும், பெட்ரோல், டீசல் […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு, வெப்ப சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1,2022 முதல் வழங்க வேண்டிய 14% அகவிலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இதுதொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு முன்பு அளித்த வாக்குறுதி: “தி.மு.க. அரசு ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு முன்பு “பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்”, “அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றுவோருக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்”, “80 வயதுக்கு மேல் […]
சென்னையில் மே 25-ஆம் தேதி இளைஞர் திறன் திருவிழாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். அதிக வேலைவாய்ப்பு உள்ள தொழில்களை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படுகிறது. திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பெற உதவும் வகையிலும் திருவிழா நடத்தப்படுகிறது என தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் விழாவில் அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
மத்திய அரசை கண்டித்து மே 25 முதல் 30-ஆம் தேதி வரை தொடர்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஎம், சிபிஐ, விசிக கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளனர். பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்து வரும் நிலையில், மத்திய […]
தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அதன்படி, நாளை முதல் மே 31-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி அதிகாரி முன்பு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10-ல் நாடு […]
உழவர்களின் நலன்களை எப்போதும் பாதுகாக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.227 கோடி மதிப்பில் வேளாண்துறை சார்பில், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் பயன்பெறுவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிங்களின் நலனுக்காக மாநில […]
சென்னையில் போலிஸாரின் தடையை மீறி, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார். சென்னையில் போலீசாரின் அனுமதி இன்றி, மே-17 இயக்கத்தினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர்.இதனையடுத்து, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 300 பேர் மீது சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விசிக-வின் வன்னியரசு, ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு […]
டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரையரங்குகளின் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டியிருக்கிறது. காமெடி படங்களை ஒதுக்கிவிட்டு கருத்துள்ள படங்களில் நடிக்கும் முடிவில் களமிறங்கி உள்ள உதயநிதி ஸ்டாலின், பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்ட்டிக்கள் 15’ என்ற திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த […]
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,831-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 […]