உழவர்களின் நலன்களை எப்போதும் பாதுகாக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.227 கோடி மதிப்பில் வேளாண்துறை சார்பில், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் பயன்பெறுவர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிங்களின் நலனுக்காக மாநில […]
சென்னையில் போலிஸாரின் தடையை மீறி, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார். சென்னையில் போலீசாரின் அனுமதி இன்றி, மே-17 இயக்கத்தினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர்.இதனையடுத்து, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 300 பேர் மீது சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விசிக-வின் வன்னியரசு, ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு […]
டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரையரங்குகளின் வெளியாகி வெற்றிகரமாக ஓடிகொண்டியிருக்கிறது. காமெடி படங்களை ஒதுக்கிவிட்டு கருத்துள்ள படங்களில் நடிக்கும் முடிவில் களமிறங்கி உள்ள உதயநிதி ஸ்டாலின், பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்ட்டிக்கள் 15’ என்ற திரைப்படம் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த […]
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,831-க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 […]
புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல். கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 புதிய கொரோனா வகை கண்டறியப்பட்டது என தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, குணமாகிவிட்டதாகவும் கூறினார். சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், […]
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை (24-ஆம் தேதி) தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் இந்த ஆண்டு முன்கூட்டியே நாளை (மே 24-ஆம் தேதி) திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில்,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல்,டீசல் விலை சதத்தை விட்டு குறையாமல் விற்பனையானது. அந்த வகையில்,நேற்று முன்தினம் வரை பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி,சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில்,பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான […]
தமிழகத்தில் விவசாயம்,நீர்வளம்,கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைப்பதற்காக கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்படும் என்றும் நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்,கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண் துறை சார்பில் ரூ.227 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் விவசாயிகளுக்கு இன்று முதல்வர் வழங்குகிறார்.அந்த வகையில்,விவசாயிகளுக்கு தென்னங்கன்று, காய்கறி,பழச்செடிகள் உள்ளிட்டவை […]
இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. நடப்பு ஆண்டில் ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டதில்,ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும்,841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் 26-ஆம் தேதி சென்னை வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் 26-ஆம் தேதி சென்னை வருகிறார். இதனையடுத்து, மீனம்பாக்கம் விமான நிலையத்தில், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து தனி விமானம் மூலம் அடையாறு செல்லும் அவர், அங்கிருந்து நேரு ஸ்டெடியத்திற்க்கு சென்று புதிய […]
சட்டவிரோதமாக மதுபானக் விருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரிக்கை. சென்னையின் மையப்பகுதியான கோயம்பேடு அருகே வி.ஆர்.மால் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடை, செல்போன் மற்றும் நகைக்கடை என அனைத்து வசதிகளும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவதுண்டு. அதிலும், விடுமுறை நாட்களில் இந்த வணிக வளாகம் கூட்ட நெரிசலாக தான் காணப்படும். இந்த நிலையில் இந்த வணிக வளாகத்தில் நான்காவது தளத்தில் பிரேசிலை சேர்ந்த […]
குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. தமிழகத்தில் 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், நேற்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு […]
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.மேலும், மத்திய அரசைப் பின்பற்றி,அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது,உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். பிடிஆர் பதிலடி: இதனையடுத்து,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
ரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே கே.எஸ்.அழகிரி அவர்களே! உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே ரத்தம் வருவது? என சீமான் ட்வீட். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ் காந்தியை கொன்ற போது எங்களது கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால், அந்த கொலையாளிகளின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடும் போது இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வருகிறது. எங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் […]
தமிழகத்தில் விவசாயம்,நீர்வளம்,கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைப்பதற்காக கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்படும் என்றும் நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்,கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண் துறை சார்பில் ரூ.227 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் நாளை முதல்வர் வழங்குகிறார்.அந்த […]
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை வரும் 28-ஆம் தேதி துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார். வரும் 28-ஆம் தேதி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வு 28-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.அக்.ஸ்டாலினை அவர்கள் தலைமை உரையாற்றவுள்ளார். மேலும்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், வரவேற்புரையாற்ற உள்ளார். […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஐந்து நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 48-மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்புக்கான கால அளவவானது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு 1 வருடமாக உயர்த்தப்பட்டது.இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன்,பின் என பிரித்து அரசு ஊழியர்கள் எடுத்துக் கொள்ளவும்,விடுப்பு சமயத்தில் அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும்,குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்து விட்டாலும் அவர்களுக்கும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு […]
மத்திய அரசு செய்துவிட்டது. இந்த திராவிட மாடல் செய்யுமா? என எச்.ராஜா ட்வீட். பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார். மத்திய அரசு கலால் வரியை குறைத்ததன் மூலம் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் […]
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளதையடுத்து ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் […]