டிடிவி தினகரனுடன் சந்திப்பு நடைபெற்றதா, இல்லையா என்பது குறித்து துணை முதல்வர் ஓபி பன்னீர் செல்வம் விளக்கமளித்துள்ளார்.
unknown nodeநேற்று முதல் புதிய பிரச்சனையை கூறி குழப்புகிறார் டிடிவி தினகரன் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது குறித்து பேட்டியளித்த அவர் தான் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற விரக்தியில் அலைந்து கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன் நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் விசுவாசமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறேன் .எடப்பாடி பழனிசாமி அரசை கலைத்து விட்டு முதல்வர் ஆக முயற்சி என்பது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு
unknown nodeஅதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து குழப்பமடைந்து தினகரன் இப்படி செயல்பட்டு வருகிறார் .தினகரன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு தங்க தமிழ்ச்செல்வனை முதலில் பேட்டி கொடுக்க வைத்து விட்டு பின்னர் பேசுகிறார்பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தி இருக்கிறார் தினகரன்” மத்திய அரசோடு கூட்டு சேர்ந்து ஆட்சியை கலைக்கப் பார்ப்பதாக தினகரன் என் மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார்” நான் இருக்கும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவன்”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்து மக்களை ஏமாற்றியவர் தினகரன் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற மனக்கவலையுடன் தினகரன் உள்ளார்.
unknown nodeசந்திப்பு நடந்தது உண்மை தான் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதால் 2017 ஜூலை 12 ஆம் தேதி பொதுவான நண்பர் வீட்டில் அவரை சந்தித்தேன்.பலர் வலியுறுத்தியதால் அரசியல் நாகரீகம் கருதி தினகரனை சந்தித்தேன்.மனம் திருந்தி நல்ல வார்த்தை சொல்வார் என்ற நம்பிக்கையில்தான் டிடிவி தினகரனை சந்தித்தேன் ,ஆனால் கட்சியை கைப்பற்றவே அவர் நினைத்தார்.எனக்கிருக்கும் நல்ல பெயரை கெடுக்க வேண்டுமென தினகரனும் அந்த கொடிய கூடாரமும் வேலை செய்து கொண்டிருக்கிறது.மேலும் எடப்பாடி பழனிசாமி அரசை கலைத்து விட்டு முதல்வர் ஆக முயற்சி என்பது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து குழப்பமடைந்து தினகரன் இப்படி செயல்பட்டு வருகிறார்.அணிகள் இணைந்த பின்னர் டிடிவி உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.
unknown nodeமூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன், அந்த திருப்தியே போதும்; ஆட்சியை கவிழ்த்து விட்டு முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்று இவ்வாறு தினகரன் சந்திப்பு குறித்து ஓ.பன்னீர் செல்வம் விளக்கமளித்துள்ளார்.
DINASUVADU