பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு.!

முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் அதிகரித்து தமிழக அரசு அறிவிப்பு.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 10,000 இலிருந்து 12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைஞரின் பிறந்தநாளை ஓராண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட திமுக சார்பில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக அவரது சொந்த ஊரான திருவாரூரில், கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் காட்டூரில், சுமார் 7000 ஏக்கரில் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கலைஞர் கோட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று திறந்து வைக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025