14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

இன்று காலை வரையில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த திடீர் மழை ஏற்பட்டது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த மழை காரணமாக நேற்று ஆறு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. தற்போது மழை அளவு குறைந்து உள்ளதால் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். திருப்பத்தூர் , திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை தொடர்வதால் அந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியான தகவலின் படி, தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று காலை வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. அதில், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025