பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு, இந்த பேரிடரை எதிர்கொள்ளவதற்கு தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் கோரிக்கையை தொடர்ந்து, பலர் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ரஜினிகாந்த், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், கொரோனா நிவாரண நிதியாக நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, ரஜினிகாந்த் கொரோனோவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என ரஜினி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா Apex Laboratory நிறுவனம் சார்பாக முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…