EIA குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிக்கக் கோரிய மனு..மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனுவில், EIA குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதே கோரிக்கையை உடன் மற்றொரு மனு நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் உள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, இந்த மனு தொடர்பாகவும் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கையும் நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
மேலும், இந்த இரண்டு வழக்குக்கும் செப்டம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025