விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார் பிரதமர் மோடி.!

கன்னியகுமாரி: தேர்தல் பிரச்சாரம் முடிந்ததை அடுத்து, 3 நாட்கள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தனது தியானத்தை தொடங்கினார்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட , நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவுபெற்றுவிட்டன. இதனை அடுத்து, இன்று முதல் ஜூன் 1 வரையில் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். உ.பி வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வந்திறங்கிய மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார்.
கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் சற்று நேரம் ஓய்வெடுத்த பிரதமர் மோடி, அங்கிருந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். அங்கு பகவதி அம்மனை தரிசித்த பிரதமர் மோடிக்கு பகவதி அம்மன் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதன், பின்னர், பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ள சிறப்பு படகு மூலம் விவேகானந்தர் மண்டபம் புறப்பட்டார்.
விவேகானந்தர் பாறைக்கு சிறப்பு படகு மூலம் சென்றடைந்த பிரதமர் மோடி பின்னர், அங்கு தனது தியானத்தை தொடங்கினார். இன்று ஆரம்பிக்கும் தியானத்தை ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் மோடி நிறைவு செய்வார் என கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு நகர் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!
February 13, 2025
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!
February 13, 2025
விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!
February 13, 2025
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025