முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அவரது வெளிநாட்டு பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் .முதலீடுகள் குறித்து 2 நாட்களில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும்.
வெள்ளை அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயார். தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளும், மாநிலத்திற்கு கிடைத்த நேரடி அந்நிய முதலீடுகளும் திமுக ஆட்சியில் பெறப்பட்டவை.
திமுக ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் ரூ.46,091 கோடி அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு, 2.21 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…