முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி – ராகுல்காந்தி.!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, தலைவர்கள் நலம் விசாரித்துள்ளனர்.

சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக நேற்று காலையில் ஸ்டாலின் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின்படி, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மேலும் மூன்று நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும், மருத்துவமனையில் இருந்தபடியே அலுவல் பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உடல்நிலை நலமாக உள்ளதாகவும், விரைவில் பூரண குணமடைவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். மேலும், ராகுல் காந்தி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவர் வழக்கில் அனைத்து மாநிலங்களுக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!
July 22, 2025
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்” – உதயநிதி ஸ்டாலின்.!
July 22, 2025