விஜய் – சீமானுக்கு அதிமுக கூட்டணிக்கு நேரடி அழைப்பு விடுத்தார் இபிஎஸ்.!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய், சீமானுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ntk tvk - EPS

சென்னை : வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்தார். இதில், அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி கூட்டணியில் இணைய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், திமுகவை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைவது அவசியம். ஒத்த கருத்துடைய கட்சிகள் என்றால், நாதக, தவெகவுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ள அவர், ஆனால் இதுவரை தவெகவுடன் நேரடியாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார்.

இருப்பினும், தவெக தலைவர் விஜய், தனது கட்சி 2026 தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார், மேலும் அதிமுகவுடன் கூட்டணி வதந்திகளை மறுத்துள்ளார். சீமானின் நாதக தனித்து போட்டியிடுவதாக உறுதியாகக் கூறியுள்ளது, மேலும் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இபிஎஸ்-இன் இந்த அழைப்பு, திமுகவுக்கு எதிராக ஒரு வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் விஜய்யும் சீமானும் இதற்கு இணங்குவார்களா என்பது தற்போது சந்தேகமாகவே உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்