இன்று முதல் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் ஓடும்

இன்று முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 50% அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என்றும், பேருந்தில் 60 சதவீத பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டுமெனவும், அதுமட்டுமின்றி, அரசு விதிமுறையின்படி மண்டலம் விட்டு மண்டலம் இயக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025