தமிழ்நாடு

அதிமுகவுக்கு சிக்கல்.. 2 முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை… ஆளுநர் அனுமதி

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்துள்ள பிராமண பாத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் அலுவலகம் சார்பில் பிராமண பாத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா ஊழல் வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க நீண்ட காலமாக தாமதித்து வந்த ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா விநியோகிப்பவர்களிடம் இருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை கோரியிருந்தது. இந்த கோரிக்கையை மாநில அரசு ஆளுநருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பி வைத்திருந்தது. ஆனால், ஆளுநர் தரப்பில் எந்த பதிலும் இல்லாததால், இந்த வழக்கில் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தது.

மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை – தலைமை நீதிபதி

இந்நிலையில், தற்போது இந்த கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். இதனால் அதிமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்று, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி.பாஸ்கரன் மீது வழக்கு தொடரவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், TNPSC தலைவர் தவிர பிற பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2021 நவம்பர் முதல் 2023 மே 20 வரை அனுப்பப்பட்ட துணைவேந்தர் நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தின் மூலம் எந்த துணைவேந்தர் நியமனமும் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அதன்படி, மே 29ம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர் நியமனம் நடைபெறவில்லை. அதே சமயத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 162 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆளுநர் அனுமதி மறுத்துள்ளார். மொத்தமாக 580 கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்ப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 53 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான கோப்பு பரிசீலினையில் உள்ளதாகவும் ஆளுநர் அலுவலகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

7 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

7 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

8 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

8 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

11 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

12 hours ago