கனமழை பாதிப்பால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தல்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில், சென்னை உட்பட தமிழநாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை கொட்டி தீர்த்தது.
இதன் விளைவாக 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது சார்பிலும், அதிமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக ஆட்சியில் நிவர்புயல் மற்றும் கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சமும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் ரூ.10 லட்சம் வழங்ப்பட்டியிருந்த நிலையில், ஆனால் தற்போது திமுக ஆட்சியின் போது கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
எனவே, அண்மையில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை, மாநில அரசு குறைந்தபட்சம் 10 லட்சம் (அ) அதற்குமேல் உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…