நெருங்கும் நிவர் புயல் ! தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை- தமிழக அரசு

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து அரசாணையை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.மேலும் பேருந்து சேவை ,ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறை என தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார்.நிவர் புயல் காரணமாக நாளை 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,விழுப்புரம் ,கடலூர்,திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை (மயிலாடுதுறை சேர்த்து) ,திருவாரூர் ,வேலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை என்று அறிவித்த நிலையில் தற்போது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் தமிழக அரசு நாளை பொது விடுமுறை என்று அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025