கொரோனாவுடன் 2021 வரை புதுச்சேரி மக்கள் வாழ்ந்து ஆக வேண்டும் – முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரி மக்கள் கொரோனாவுடன் 2021 ஜனவரி மாதம் வரை வாழ்ந்துதான் ஆகவேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு வீடியோ பதிவு மூலம் பேட்டி அளித்த முதல்வர் நாராயணசாமி அவர்கள், புதுச்சேரியில் கொரோனாவின் தாக்கம் கடந்த 10 நாட்களாக அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் உச்சகட்டமாக 486 பேர் பாதிக்கப்பட்டனர், தற்போது குறைந்து இன்று 328 பேராக உள்ளது. நம்முடைய மாநிலத்தில் குணமடைந்து சென்றவர்களின் விகிதம் 57% தாண்டியுள்ளது. புதுச்சேரியில் இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு விகிதம் 1.57 சதவீதம் தான்.
மக்களுக்கு பரிசோதனை செய்வதில் இந்தியாவில் புதுச்சேரி முதல் மாநிலமாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா நோய்க்கு மருந்து ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் கிடைக்கும் அதுவரை நோய் இந்தியாவில் பரவும் என விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் அவர்கள் அரசிடம் கூறியுள்ளார். எனவே புதுச்சேரி மக்கள் கொரோனாவுடன் வாழ்ந்துதான் ஆகவேண்டும். அரசையோ மருத்துவர்களையோ குறை கூறி பலன் இல்லை. எனவே மக்களுக்கு தான் பொறுப்பு இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025