ராஜேஷ் தாஸ் விவகாரம்.. இன்று பிற்பகல் விசாரணை ..! உயர் அதிகாரிக்கே இந்த நிலைமையா..? -நீதிபதி .!

The sexual harassment complaint against DGP Rajesh Das came forward automatically this afternoon and the High Court is hearing the case.

டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை இன்று பிற்பகல் தானாக முன் வந்து  உயர்நீதிமன்றம் விசாரணை நடந்தயுள்ளது.

சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பியாக இருக்கக்கூடிய ராஜேஷ் தாஸ் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி அந்த பெண் எஸ்.பி டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார்.

பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளார். காவல்துறையில் உள்ள பெண் உயர் அதிகாரிக்கே இந்த நிலைமையா..? என கேள்வி எழுப்பிய நீதிபதி இன்று பிற்பகல் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துகொள்ளவதாகவும் தெரிவித்துள்ளார்.