தேர்தல் சின்னம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.
இதனிடையே நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ரஜினி கேட்ட பாபா முத்திரை சின்னத்திற்கு, தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்த நிலையில், அதற்கு பதிலாக மக்கள் சேவை கட்சிக்கு, ‘ஆட்டோ’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தலைமையிடமிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை, நம் ரஜினி மக்கள் மன்ற காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…