நாளை நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை ? பாதுகாப்பு கோரி கடிதம்

நாளை நடிகர் ரஜினிகாந்த் ஆலோசிக்க உள்ளதாக செய்திகள் வரும் நிலையில்,கூட்டத்திற்கு அனுமதி கோரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சென்னை காவல்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கொரோனா சமயத்தில் மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி பொது நிகழ்வில் பங்கேற்காமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில்,நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்துகொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த சந்திப்பில்,அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்பை வெளிட்ட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஆலோசனை நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில், கூட்டத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சென்னை காவல்துறைக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025