ராஜீவ் காந்தி கொலை வழக்கு : சிறையில் இருந்து வெளியே வந்தார் ரவிச்சந்திரன்

- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
- குற்றவாளிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் 15 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.இவர்களில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரி அவரது அம்மா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் .அந்த மனுவில், எனது மகன் ரவிசந்திரனுக்கு நீண்டகால பரோல் வழங்கவேண்டும்” என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ,15 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.அதாவது ஜனவரி 10 -ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ரவிச்சந்திரனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சாதாரண விடுப்பு வழங்கியிருந்தது.இந்நிலையில் ரவிச்சந்திரன் 15 நாட்கள் பரோல் விடுப்பில் சிறையிலிருந்து புறப்பட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வயலில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து பேசிய இபிஎஸ்.!
July 18, 2025