ராமநாதபுரம்: அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைப்பு – மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிக்கை.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதுவரை தாங்கள் அனைவரும் கட்சி பணியினை தொடர்ந்து செய்துமாறும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, உடனடியாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரணி.R.முருகேசன் அவர்கள் புதிய மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்படுகிறார் என்றும் தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் எனவும் கூறி மற்றொரு அறிக்கை வெளியிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
அறிவிக்கை
இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்பதனை தெரிவித்துகொள்கிறேன்
புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்
– மாநில தலைலர் திரு.@annamalai_k #Annamalai pic.twitter.com/HETRyzyVJ0
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 27, 2023