நாளை பரோலில் வெளிவருகிறார் ரவிச்சந்திரன் – சிறைத்துறை

Ravichandran, who is in jail in the Rajiv Gandhi murder case, will be released on parole tomorrow, the Prisons Department said.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளிவருகிறார் என்று சிறைத்துறை அறிவிப்பு.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் உள்ளார். ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என முதல்வரிடம் ரவிச்சந்திரன் தாய் தரப்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோலில் வெளியே செல்ல தமிழக சிறைத்துறை உத்தரவை வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வருகிறார் என கூறப்பட்டது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளிவருகிறார் என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க ஸ்டாலின் மதுரை வழியாக குமரி சென்றதால் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறை நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.