கோயம்பேடு மார்க்கெட்டை திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40-க்கு விற்க தயார் – வியாபாரிகள்!

கோயம்பேடு மார்க்கெட்டை திறந்தால் ஒரு கிலோ தக்காளி ருபாய் 40க்கு விற்க தயார் என உயர்நீதிமன்றத்தில் வியாபாரிகள் தகவல்.
தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த பல நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளது, எனவே தமிழகத்தில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிட்டத்தட்ட ஆப்பிளின் விலைக்கு நிகராக தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று சில மாவட்டங்களில் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் தொடர் மழை காரணமாக அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோயம்பேட்டில் உள்ள தக்காளி மார்க்கெட்டுக்கான மைதானத்தை திறந்தால் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு தருவதற்கு தயார் எனவும், தக்காளியின் விலையை குறைத்து தமிழக அரசுக்கு உதவ நாங்கள் தயார் எனவும் மொத்த வியாபாரிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.