ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

The Government of Tamil Nadu has issued guidelines for conducting jallikattu competitions in Tamil Nadu. Only 50 percent of the audience.

தமிழகக்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, வரும் 2021-ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காளையுடன் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று பெற்றிருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடநாடு நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 300 பேர் வரை கலந்துகொள்ளலாம்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு 7 நாட்களுக்கு முன்பு பதிவு செய்து அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவர் என அறிவிப்பு.

போட்டியில பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்று பெற்றிருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு மேற்பார்வை செய்யும் அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பரிசோதனை கட்டாயம்.