“இந்தியா” பெயரை மாற்ற நினைத்தால்… வைகோ எச்சரிக்கை!

“இந்தியா” எனும் பெயரை “இந்துஸ்தான்” அல்லது “பாரத்” என மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா எனும் பெயரை “இந்துஸ்தான்” அல்லது “பாரத்” என மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, ஜூன் 3, அன்று உச்சநீதிமன்றதில் விசாரணைக்கு வந்தபொது, இந்த மனுவை கோரிக்கை மனுவாகக் கருதி, மத்திய அரசு முடிவு எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்திய அரசியல் நிர்ணய சபையில் ஹிந்துஸ்தான் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இது மறைக்க முடியாத வரலாறு எனவும், நாட்டின் பெயரையே மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை துணைக்கு அழைப்பதாகவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டுமானால், இந்திய ஐக்கிய நாடுகள் என்று மாற்றுவதுதான் பொருத்தமாகவும் கூட்டாட்சி கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பதாகவும் அமையும் என்று கூறிய வைகோ, தங்கள் விருப்பம் போல நாட்டின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025