மத்திய சுகாதார துறைக்கு கோரிக்கை திமுக எம்.பி. கனிமொழி ஒன்றை விடுத்துள்ளார்.
ஜியோ நிறுவனம் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காலர் டியூன் முறையை கையாண்டு வருகிறது.எந்தவொரு நெட்வொர்க்கிலிருந்தும் ஜியோக்கு அழைக்கும் போது ஒருவர் இருமுவது போன்று சத்தத்துடன் கொரோனா பற்றிய விழிப்புணர்வு அந்த காலர் டியூனில் ஆங்கிலத்தில் சொல்லப்படும்.
unknown nodeஇந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய சுகாதார துறைக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது அவரது பதிவில்,செல்போன் அழைப்பின்போது கொரோனா குறித்து விழிப்புணர்வு செய்தி ஒலிபரப்படுகிறது. அது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த செய்தி அந்தந்த மாநில மொழிகளில் ஒலிபரப்பினால், அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு சென்று சேரும் என்று தெரிவித்துள்ளார்.