ரேஷன் கடையில் அரிசி பதுக்கல் – விற்பனையாளர் சஸ்பெண்ட்!

A vendor who hoarded rice at a ration shop in Vellore district has been suspended.

வேலூர் மாவட்டத்திலுள்ள ரேஷன் கடையிலுள்ள அரிசியை பதுக்கிய விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் முத்து மண்டபம் அருகே உள்ள ரேஷன் கடை விற்பனையாளர் கலையரசி அரிசியை பொதுமக்களுக்கு கொடுக்காமல் பதுக்கி வைத்துள்ளார். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கலையரசியின் வீட்டில் ஆய்வு செய்த மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி முறையாக அரிசி வழங்காமல் 10 மூட்டை அரிசியை பக்கத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் கடை விற்பனையாளர் கலையரசியை பணியிடை நீக்கம் செய்து காமராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.