முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் (CMGHS) கீழ் ரூ. 299 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை.
தமிழக முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின்கீழ் 20,000 வீடுகள் கட்ட முதற்கட்டமாக ரூ.299 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
“2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில் சூரிய சக்தியால் இயங்கும் முதலமைச்சரின் பசுமை இல்லத் திட்டத்தின் (CMGHS) கீழ் டோக்கன் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும்,எனவே, 2021-22 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தை (CMGHS) செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.299 கோடியை அரசு அனுமதித்து விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில்,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனரின் முன்மொழிவை விரிவாக ஆய்வு செய்த பிறகு, 2021-2022 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் (CMGHS) கீழ் ரூ.299 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளது.
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…