கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.
இதனால், இந்த நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மின் கட்டணம் செலுத்த மாற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது இந்த மாவட்டங்களுக்கு அதிக கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி அதாவது இன்றுடன் கால அவகாசம் முடிகிறது. இன்றுடன் கால அவகாசம் நிறைவடைவதால், இந்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு இன்றுடன் கடைசி நாள் என்பதால் கூட்டத்தை தவிர்க்க இணையதள பரிவா்த்தனை மூலம் மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மின் கட்டணம் செலுத்தாமல் இருப்பவர்களுக்கு அபராதத் தொகையோ அல்லது மின் இணைப்பு துண்டிக்கப்படவோ வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…