கடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது புகார்!

கடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது மதுரையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கங்கை ராஜன் என்பவர் மருத்துவ செலவுக்காக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். இந்நிலையில் வட்டியுடன் கடனை கங்கை ராஜன் திருப்பி கொடுத்துள்ளார். இருப்பினும் மீண்டும் கந்து வட்டி கேட்டு சலூன் கடை உரிமையாளர் மோகன் ராஜனை மிரட்டியுள்ளார்.
எனவே மோகன் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் கங்கை ராஜன் அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சலூன் கடை உரிமையாளர் மோகன் தனது மகளின் கல்விச் செலவுக்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை கொரோனா நிதிக்காக பிரதமரின் மான் கி பாத்தில் வழங்கி பாராட்டு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்.., பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய மாவட்ட நிர்வாகம்.!
May 29, 2025
“மூன்றாம் உலகப்போர்”..இது டிரம்பிற்கு புரியும்! எச்சரிக்கை கொடுத்த முன்னாள் ரஷ்ய அதிபர்!
May 28, 2025