#BREAKING : சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடனே சரணடைய வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு

Published by
Venu

கொலை வழக்கில்  சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடனே நீதிமன்றத்தில் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜீவஜோதி என்பவர் சரவணபவன் உணவக மேலாளரின் மகள் ஆவார்.ஜீவஜோதியின் கணவர் பெயரை பிரின்ஸ் சாந்தகுமார் ஆகும். ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் சரவணபவன் உணவகத்தில்வேலையாளாக பணியாற்றி வந்தார்.

 

ஆனால் ஜீவஜோதியை திருமணம் செய்து கொண்டால்  நல்ல பலன்களை அடையலாம் என்று ராஜகோபாலிடம் ஜோதிடர்கள் கூறினார்கள். ஏற்கெனவே ராஜகோபாலுக்கு  2 மனைவிகள். இருந்தாலும் ராஜகோபால்  ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு ஜீவஜோதியை 3-ஆவதாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

எனவே ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கடத்தப்பட்டார்.இதனால் ஜீவஜோதி கணவரை காணவில்லை என்றும் ராஜகோபாலின் ஆட்கள் அவரை கடத்திவிட்டதாகவும் சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகார் தொடர்பாக காவல்த்துறையினர் விசாரணையை தொடங்கினார்கள்.பின்னர் சில நாட்களில் பிரின்ஸ் சாந்தகுமாரின்(ஜீவஜோதியின் கணவர்) உடல் கொடைக்கானலில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சரவணபவன் உரிமையாளர்  ராஜகோபால் ,அவரது மேலாளர் டேனியல் உட்பட 9 பேர்  குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.இந்த  வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்  ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.மீதமுள்ள  8 பேருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதேபோல் தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்  ராஜகோபால்.ஆனால்  மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றமும் சரவணபவன் உரிமையாளர்  ராஜகோபாலின் தண்டனையை உறுதி செய்தது.

இதனால் சரவணபவன் உரிமையாளர்  ராஜகோபால் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.ஆனால் அரசு சார்பில் சரவணபவன் உரிமையாளர்  ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டுமென சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ப்பட்டது.பின்னர்  வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2009-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவு பிறப்பித்தது.

Image result for சரவண பவன் உரிமையாளர் ராஜகோபா

இதனால் சரவணபவன் உரிமையாளர்  ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.பின்  இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அதில்  சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு  ஆயுள் தண்டனை விதித்த  சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை  உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.மேலும் ஜூலை 7-ஆம் தேதிக்குள் ராஜகோபால்  பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில்  சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ராஜகோபாலுக்கு கெடு விதித்தது.

ஆனால் ராஜகோபால் தரப்பில் உடல் நிலையை காரணம் காட்டி  சரணடைவதிலிருந்து விலக்குக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜகோபால் உடனே நீதிமன்றத்தில் சரணடைய  உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.பின் சரணடைவதிலிருந்து விலக்குக் கோரிய ராஜகோபாலின் மனு நிராகரித்தது.

Published by
Venu

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

2 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

4 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago