பிப்ரவரி முதல் வாரம் சசிகலா சென்னை வருகை..?

நாளை மறுநாள் விடுதலையாகும் சசிகலா பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3-ஆம் தேதி பெங்களுருவில் இருந்து சசிகலா சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் வரும் சசிகலா மெரினா ஜெயலலிதா மற்றும் தஞ்சை நடராஜன் நினைவிடம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு தற்போது கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துள்ளது. சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சசிகலா தற்போது சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனையை நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.