சசிகலா வருகை: மீண்டும் டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக.!

நாளை மறுநாள் பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் மீண்டும் டிஜிபியிடம் புகாரளித்துள்ளனர்.
சென்னையில் டி.ஜி.பி. திரிபாதியை சந்தித்து சசிகலா மீது அதிமுக சார்பில் அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மீண்டும் புகாரளித்துள்ளனர். அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சென்று, சசிகலா பெங்களூரில் இருந்து வரும் போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025