எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில், அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமான 53 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.வேலுமணி உட்பட அவரது பங்குதாரர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கோவை வடவள்ளியில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திர சேகர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில், அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிமன்றம் இருக்கும் போது, காவல்துறையினரை ஏவி விட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சிப்பதாகவும், எங்கள் மீதான குற்றசாட்டுகள் தவறு என்பதை நீதிமன்றத்திற்கு சென்று, நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…