பள்ளிகளை அக்டோபரில் திறப்பு குறித்து தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான பேரன்ட் சர்க்கிள் நிறுவனம் பள்ளி முதல்வர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஆன்லைன் மூலமாக ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றினை நடத்தியது.
இந்த கூட்டத்தில் சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் ஒட்டுமொத்த பேரும் பங்கேற்று உரையாற்றினர்.அதில் பேசிய நிர்வாகிகள் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை தற்போது திறக்க முடியாது அத்தகைய சூழல் நிலவி வருகிறது.
மேலும் தென்மேற்கு பருவமழையால் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வகுப்புகளில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது பள்ளிகளில் சவாலான பணியாகும். குறிப்பாக ‘பிளே ஸ்கூல், ப்ரீ ஸ்கூல், பிரைமரி ஸ்கூல்’ என இரண்டரை வயது முதல் 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை தற்போது நடத்த முடியாது.
இந்நிலையில் இக்காலக்கட்டத்தில் பாடதிட்டங்கள் பாடங்களின் அளவுகள் குறைக்க வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டடங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.கொரோனாவுக்கு பின்பு ஏற்படக்கூடிய நிலைக்கான விதிகளை இப்போதே வகுக்க வேண்டும். கல்வி ஆண்டின் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். எனவே இதுபோன்ற காரணங்களால் அக்டோபர் வரை பள்ளிகளை திறப்பது என்பது சாத்தியம் இல்லை என்று கூட்டத்தில் ஒரு மனதாக தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…
டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…