உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? – டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி

Published by
பாலா கலியமூர்த்தி

Seeman: சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தேனியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலனுக்கு ஆதரவாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது சீமான் கூறியதாவது, சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்? என கேள்வி உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா என்றார்.   சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது, சசிகலா வழக்கை அவசர அவசரமாக விசாரித்து தண்டனை வழங்கியது யார்?.

சசிகலா குடும்பம், கட்சி, ஆட்சி இருக்கக்கூடாது, அதை தவிர வேறொருவர் கையில் கொடுக்கும் திட்டத்தை வகுத்தது யார் என சரமாரியாக கேள்வி எழுப்பிய சீமான், இதற்கு மனசாட்சியுடன் மக்கள் முன்பு டிடிவி தினகரன் பதில் சொல்ல வேண்டும் என கூறினார். சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் பாஜக தான் காரணம்.

டிடிவி தினகரன், சசிகலா பிரச்சினையில் இருந்த போது தமிழகத்தில் குரல் கொடுத்த ஒரே ஆள் நான். இரட்டை இலை சின்ன வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் இருக்கிறார். இரட்டை இலையை பறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்தது பிரதமர் மோடி தான். என்னை மிரட்டி பார்த்தார்கள், நான் சமரசம் ஆகவில்லை, சரணடையவில்லை என சீமான் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று விவசாயி சின்னத்தை முடக்கி விட்டார்கள், தற்போது  அமமுகவுக்கு குக்கர் சின்னம் எப்படி வந்தது. இவ்வளவு நிகழ்ந்தும் டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் எனவும் விமர்சத்தார். இதனிடையே, தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயாலளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

28 minutes ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

1 hour ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

4 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

4 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

5 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

5 hours ago