மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“தனது அளப்பெரும் நடிப்பாற்றலால் தமிழ்த்திரையுலகைத் தலைநிமிரச்செய்த ஒப்பற்றப் பெருங்கலைஞன் – தனித்துவமிக்கச் செயல்பாடுகளாலும், புதுமை முயற்சிகளாலும் திரைக்கலை வடிவத்திற்கு புத்துயிர் ஊட்டுகிற தலைசிறந்த படைப்பாளி – பன்முகத்திறன் கொண்டு, திரைக்கலையின் உச்சம் தொட்டு தலைமுறைகளைக் கடந்து மக்கள் மனங்களில் பேராதிக்கம் செய்கிற திரை ஆளுமை.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…