உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதிகளில் பாலம் அமைப்பதற்காக வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்றிருந்தார்.
வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் முழக்கமிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே எதிர்பாராத விதமாக திடீரென சீமான் மயங்கி விழுந்தார். பின்னர், அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் உடனடியாக சீமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், சீமானின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீமான் தனது ட்விட்டரில் எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…