பரபரப்பு : திருவள்ளூரில் காவலர் தூக்கிட்டு தற்கொலை..!

திருவள்ளூரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் தற்கொலை.
திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் வள்ளிநாயகம். இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து விசாரித்த போது, வள்ளிநாயகம் காவல்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.