அமெரிக்காவில் வர்த்தக தளத்தில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்ட இந்திய மரக்கட்டில்..!

அமெரிக்காவின் வர்த்தக தளத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மரக்கட்டிலானது ரூ.1,12,039க்கு விற்பனை.
பொதுவாகவே இந்தியாவில் தயாரிக்கப்படும் சில உணவுப் பொருட்களும் சரி கைவினைப் பொருட்களும் சரி வெளிநாடுகளில் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம் தான். அந்த வகையில் அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மரக்கட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவது இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக தளத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மரக்கட்டிலானது ரூ.1,12,039க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்திய பாரம்பரிய முறையில் கைகளால் தயாரிக்கப்பட்ட அரியவகை கட்டில் என இந்த விற்பனை தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.