Senthil Balaji [Image source : file image]
அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இசிஜியில் மாறுபாடு இருந்ததால், இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா என சோதிக்க மருத்துவர்கள் முடிவு செய்து, பரிந்துரைத்தனர்.
அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடைபெற்று வந்தது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனை நிறைவு பெற்று, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
அதில், மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை அடுத்து, செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய அறுவை (பைபாஸ் சர்ஜரி) சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளார். எப்போது, எங்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என குடும்பத்தினருடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…