தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சண்முகம் பதவியேற்பு!

தமிழகத்தின் 46 வது தலைமை செயலாளராக சண்முகம் அவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் பதவிக்கு காலம் முடிந்த நிலையில் புதிய தலைமை செயலாளராக சண்முகம் அவர்கள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் அவர்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் அவர்கள் 1985 ம் ஆண்டு ஐ.எ.எஸ் குழுவில் தேவானவர் ஆவார். தமிழக அரசின் நிதி துறை செயலராக கடந்த 2010 ம் ஆண்டு திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 9 ஆண்டுகள் நிதித்துறை செயலாராக இருந்து வந்துள்ளார். தமிழக அரசின் முதன்மை தலைமை செயலாளராகவும் இவர் இருந்துள்ளார். தமிழக அரசின் நிதித்துறை க்கான பட்ஜெட்கள் அனைத்தும் இவரது தலைமையிலே தயாராகும்.
கிரிஜா வைத்யநாதன் பதவிக்காலம் இன்றுடன் முடியும் நிலையில், புதிய தலைமை செயலாளராக சண்முகம் அவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025