தளபதி 65! பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் – ஏ.ஆர்.ரகுமான்! 3டி திரைப்படம்?!

தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளி அன்று அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பட அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை.
அதற்குள் அடுத்ததாக தளபதி 65 பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க வாய்ப்பிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் பரவி வந்தான. அதுவும் முதல்வன் பாகம் 2 என வதந்தி பரவின.
அனால் தற்போது புதிய செய்தி ஒன்று பரவி வருகிறது. அதாவது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் விஜய் படம் ஒரு சைன்டிபிக் திரைப்படம் 3டியில் ரெடியாக உள்ளது எனவும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் எனவும் தகவல்கள் பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025